ஒரே நாளில் புதிய உச்சம் தொட்டுள்ள கிருமி பாதிப்பு

ஒரே நாளில் புதிய உச்சம் தொட்டுள்ள கிருமி பாதிப்பு

1 mins read
60f5d42b-1616-41a3-aed8-cce7c84d36c0
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா கிருமி பாதிப்பு புதிய உச்சம் ெதாடும் வகையில் மேலும் 40,425 பேரிடம் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படம்: இபிஏ -

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா கிருமி பாதிப்பு புதிய உச்சம் ெதாடும் வகையில் மேலும் 40,425 பேரிடம் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இத்தொற் றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,77,618ல் இருந்து 11,18,043 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,423ல் இருந்து 7,00,087ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,90,459 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, கர்நாடகாவில் ஒரே நாளில் 4,120 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து இம்மாநிலத்தில் 63,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 91 பேர் கொரோனா வுக்குப் பலியானதை அடுத்து அங்கு இதுவரை இத்தொற்றால் 1,331 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் இம்மாநிலம் முழுவதும் இதுவரை 22,000க்கும் அதிக மானோர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

இதற்கிடையே, புவனேஷ்வரில் உள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனமும் எய்ம்ஸ் மருத்துவமனையும் சேர்ந்து நடத்தியுள்ள ஆய்வில் "மழைக்காலம், குளிர்காலத் தில் இத்தொற்று பரவும் வேகம் அதிகரிக்கும். வெயில் அதிகரிக்கும் காலத்தில் இத்தொற்று பரவும் வேகம் கட்டுப்படும்," என்று தெரியவந்துள்ளது.