கேரளா: 180 கிலோ தங்கம் கடத்தல்

கேரளா: 180 கிலோ தங்கம் கடத்தல்

1 mins read
168dc703-e81e-4856-8a8f-f38116a67c82
கடந்த ஆண்டு ஜூலை முதல் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இந்தக் கூட்டம் இது வரை சுமார் 300 கிலோவரை கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வில் ஐக்கிய அரபு சிற்­ற­ர­சின் தூத­ர­கத்­தின் பெய­ரில் சுமார் 180 கிலோ தங்­கம் கடத்­தப்­பட்­டது விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் பதவி விலக வேண்­டும் என காங்­கி­ரஸ் வலியுறுத்தி உள்­ளது.

இந்த வழக்­கில் கைது செய்­யப்­பட்­டுள்ள சுவப்னா, சந்­தீப் ஆகி­யோ­ரி­டம் தீவிர விசா­ரணை நடக்­கும் நிலை­யில், முக்­கிய குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­படும் பாசில் பரீத் என்­ப­வர் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சுக்கு தப்­பி­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

கடத்­த­லில் ஈடு­பட்­ட­வர்­கள் தூத­ர­கத்­தின் பெய­ரைப் பயன்­படுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இரு­பது முறைக்கும் மேல் தங்­கம் கடத்தி வந்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து கடத்­தல் தங்கத்தைப் பறி­மு­தல் செய்­யும் நட­வ­டிக்­கையை தேசிய புல­னாய்வு முகவை அதி­கா­ரி­கள் தொடங்­கி­யுள்­ள­தா­க இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்