நாடு முழுவதும் நூறு மருத்துவர்கள் உயிரிழப்பு

ஈரோடு: கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் நாடு முழு­வ­தும் நூற்­றுக்­கும் மேற்­பட்ட மருத்­து­வர்­கள் உயி­ரி­ழந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

ஈரோட்­டில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய இந்திய மருத்­து­வர் சங்­கத்­தின் இளம் மருத்­து­வர்­கள் அமைப்­பின் தலை­வர் அபுல் ஹாசன் இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தார்.

நாடு முழு­வ­தும் இது­வரை 1,350 மருத்­து­வர்­கள் நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

“மருத்­து­வர்­களில் சில­ர் நீரி­ழிவு, இதய நோய், ரத்­தக் கொதிப்பு போன்ற பிரச்­சி­னை­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். எனி­னும் சேவை நோக்­கு­டன் கொவிட்-19 நோயாளி­க­ளைக் காப்­பாற்­றும் பொருட்டு பணியில் ஈடு­பட்­ட­னர்.

“அதன் கார­ண­மாக நோய்த் தொற்று ஏற்­பட்டு உயி­ரி­ழந்­துள்­ள­னர். இறந்த அனைத்து மருத்­து­வர்­களும் நல்ல அனு­ப­வ­மும் திற­மை­யும் உள்­ள­வர்கள். அவர்­க­ளின் மறைவு நாட்டுக்குப் பேரி­ழப்பு,” என்­றார் அபுல் ஹாசன்.

மருத்­து­வர்­க­ளின் நலன் கருதி, அவர்­க­ளுக்­கான பாது­காப்பு நட­வடிக்­கை­யில் அரசு கூடு­தல் கவனம் செலுத்த வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்ட அவர், மருத்­து­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் முழு கவச உடை தர­மாக இருப்­பதை அரசு உறுதி செய்யவேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!