ஜெய்ப்பூர்: தமது ஆதரவாளர்களுடன் ஹரியானாவில் தங்கி இருப்பதாகவும், ராஜஸ்தான் காவல்துறை தமது ஆதரவாளர்களை வேட்டையாட முயற்சிப்பதாகவும் சச்சின் பைலட் தரப்பு குற்றம்சாட்டி உள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் எம்எல்ஏக்களை சொகுசு தங்குவிடுதி ஒன்றில் தங்க வைத்திருப்பதாகவும் அவர்களை வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் சச்சின் பைலட் வலியுறுத்தி உள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த சச்சின் அண்மையில் முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்.
முப்பது எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறியதையடுத்து, ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நடைபெற்று வருகிறது.
"சச்சின் பைலட் எங்களை மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுவது உண்மையல்ல. மேலும் ஊடகச் செய்திகளில் குறிப்பிட்டதைப் போல் நாங்கள் எந்தவொரு தங்கு விடுதியிலும் தங்கவில்லை.
"சட்டப்பேரவையில் முன்னிலையாக வேண்டிய தருணம் வரும்போது அனைவரும் அங்கு இருப்போம். சச்சின் பைலட்டுடன் தாம் கடந்த 18 மாதங்களாகப் பேசுவதே இல்லை என்கிறார் முதல்வர் அசோக் கெலாட்.
"அப்படியானால் அவர் எத்தகைய ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியவந்துள்ளது," என சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ ஒருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே சச்சின் பைலட் அடைத்து வைத்துள்ள எம்எல்ஏக்கள் தங்கள் தரப்பைச் சேர்ந்தவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதறி அழுவதாக முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
எனவே அந்த எம்எல்ஏக்கள் சுதந்திரமாக நடமாட சச்சின் பைலட் அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
ராஜஸ்தான் அரசியல் களத்தில் நிலவும் இத்தகைய பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பாஜக தான் அனைத்துக்கும் காரணம் என காங்கிரஸ் சாடியுள்ளது.

