திருமலை கோயிலில் அர்ச்சகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு; 15 நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு

திருமலை கோயிலில் அர்ச்சகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு; 15 நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு

1 mins read
d814f018-d86c-4186-8485-aac0e7f8f845
இணையம்வழியாக மட்டுமே திருமலை கோவில் தரிசன நுழைவுச்சீட்டு விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. படம்: ஊடகம் -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அந்தக் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக கவுன்டர்களில் நுழைவுச்சீட்டு விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இணையம்வழியாக மட்டுமே திருமலை கோவில் தரிசன நுழைவுச்சீட்டு விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஆகஸ்ட் 5ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் 18 அர்ச்சகர்களுக்கு கொவிட்-19 தொற்றியதாகக் கூறப்பட்டதில் 75 வயதான ஸ்ரீனிவாச மூர்த்தி தீக்‌ஷிதலு எனும் முன்னாள் தலைமை அர்ச்சகர் கொவிட்-19ஆல் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்