'ஆக்ஸ்ஃபர்ட் ஆய்வில் உருவான கொவிட்-19 தடுப்பு மருந்து இந்தியாவில் பெருமளவில் தயாரிக்கப்படும்'

கொரோனா கிருமிக்கு எதிராக ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்படும் AZD1222 எனும் தடுப்பூசிக்கான சோதனைகள் வெற்றியடைந்திருப்பதாகவும் அதனால் அதிக அளவிலான பக்க விளைவுகள் இல்லை என்றும் தெரியவந்துள்ள நிலையில், அந்த ஆய்வில் பங்குதாரராக இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், இந்தியாவில் அதனைத் தயாரிக்க உரிமம் வழங்கப்பட்டதும், அந்த மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தடுப்பூசி ஏற்படுத்திய பக்க விளைவுகளை பாரசிட்டமால் மருந்துகள் மூலம் சரிப்படுத்திவிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த தடுப்பூசி சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், ஆனால் அதனை பாராசிட்டமல் எடுத்துக்கொள்வதன் மூலமே சரிசெய்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தத் தடுப்புமருந்தின் தொடர்பில் இந்திய ஒழுங்குமுறை சோதனை உரிமத்திற்கு ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க இருப்பதாகக் குறிப்பிட்ட ரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், அனுமதி கிடைத்ததும் சோதனைகளைத் தொடங்குவதுடன், இந்தியாவில் அந்த மருந்து பெருமளவில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்படும் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனையை இந்தியா தொடங்கியுள்ள நிலையில், அதன் முதல் தரவுத் தொகுப்பு தொடர்பான முடிவுகளை ஆய்வாளர்கள் எட்டுவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!