தங்க கடத்தல் பணம் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு

தங்க கடத்தல் பணம் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு

2 mins read
8850a157-1739-4b31-ba67-3e1b2da6ac54
ஸ்வப்னா சுரேஷ். இவரது காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள அர­சி­யலில் புய­லைக் கிளப்பி இருக்­கும் தங்­கக் கடத்­தல் விவ­கா­ரத்­தில் தின­மும் புதுப் புது தக­வல்­கள் வெளி­வந்­த வண்­ணம் உள்­ளது.

கேரள மாநில தலை­ந­கர் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள ஐக்­கிய அரபு சிற­ற­ரசு தூத­ர­கத்­தின் பெய­ரில் சரக்கு விமா­னத்­தில் கடத்தி வரப்­பட்ட 30 கிலோ தங்­கக்­கட்­டி­கள் சுங்க அதி­கா­ரி­க­ளி­டம் சிக்­கின. இந்த வழக்கை தேசிய புல­னாய்வு முகமை (என்­ஐஏ) தீவி­ர­மாக விசா­ரித்து வரு­கிறது. கடத்­தல் தொடர்­பில் 13 பேர் கைது செய்­யப்­பட்டு உள்­ள­னர். அவர்­களில் முக்­கிய குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­படும் ஸ்வப்னா சுரேஷ் கேரள அர­சின் தக­வல் தொழில்­நுட்ப கட்­ட­மைப்பு நிறு­வன அதி­கா­ரி­யாக வேலை செய்­த­வர். ஸ்வப்­னா­வுக்­கும் இவ­ரோடு பெங்­க­ளூ­ரில் கைது செய்­யப்­பட்ட சந்­தீப் நாய­ருக்­கும் வழங்­கப்­பட்ட என்­ஐஏ காவல் நேற்­றுக் காலை முடி­வ­டைந்த நிலை­யில் மேலும் மூன்று நாட்­க­ளுக்­குக் காவலை நீட்­டித்து சிறப்பு நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்­பித்து உள்­ளது.

இதற்­கி­டையே, ஸ்வப்னா சுரேஷ் தலை­மை­யி­லான அணி 14 முறை தங்­கக் கடத்­த­லில் ஈடு­பட்­டுள்­ள­தாக சுங்­கத் துறை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர். சந்­தீப் நாயர் போலிஸ் வாக­னங்­க­ளைப் பயன்

­ப­டுத்தி கடத்­தப்­பட்ட தங்­கத்தை கேரளா முழு­வ­தும் விநி­யோ­கித்­தார் எனக் கண்­டு­பி­டித்­துள்­ள­தாக என்­ஐஏ வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், பள்­ளிப்­ப­டிப்­பில் 10ஆவது கூட தேர்ச்சி பெறாக ஸ்வப்னா சுரே­ஷுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்­ப­ளம் பெறக்­கூ­டிய வேலை கொடுக்­கப்­பட்­டது எப்­படி? என்ற கேள்­வி­யும் எழுந்­துள்­ளது. அவ­ரது சான்­றி­தழ்­கள் போலி என மகாராஷ்­டி­ரா­வின் பாபா சாகிப் அம்­பேத்­கர் பல்­க­லைக்­க­ழ­கம் தெரி­வித்­து­விட்­டது.

மேலும் முதல்­வர் அலு­வ­ல­கத்­தில் வேலை செய்த சிவ­சங்­க­ரின் செயல்­பா­டு­கள் முத­ல­மைச்­ச­ரான பின­ராயி விஜ­ய­னுக்கு எப்­ப­டித் தெரி­யா­மல் போயின என்று கேள்வி எழுப்பும் என்­ஐஏ அதி­கா­ரி­கள் பின­ராயி விஜ­யனை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தத் தங்­கக் கடத்­த­லில் தமி­ழ­கம் தொடர்­பு­டைய விவ­கா­ர­மும் வெளியே வந்­துள்­ளது. ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள், சவூதி அரே­பியா ஆகிய நாடு­களில் இருந்து தமி­ழ­கத்­தில் தங்க நகைக் கடை­கள் வைத்­துள்ள கேரள நிறு­வ­னங்­க­ளுக்கு ஸ்வப்­னா­வின் கூட்­டா­ளி­யான ஜலால், தங்­கம் விநி­யோ­கம் செய்­தி­ருப்­ப­தை­யும் அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­துள்­ள­னர்.

2015ஆம் ஆண்டு கொச்சி விமான நிலை­யத்­தில் குடி­நு­ழைவு அதி­கா­ரி­கள் துணை­யு­டன் தங்­கத்தை கடத்­திய வழக்­கில் ஜலால் குற்­ற­வாளி என ஏற்­கெ­னவே சுங்­கத் துறை அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர். தங்­கம் கடத்­து­வ­தற்கு என அவர் தமது காரின் பின் இருக்­கை­யில் ஒரு ரக­சிய அறையை வைத்­தி­ருந்­தார் எனக் கூறிய அதி­கா­ரி­கள் அந்த காரை பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

மேலும் ஜலால் தமிழ்த் திரைப்­ப­டங்­க­ளின் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு நிதி­யு­தவி செய்­தி­ருக்­கி­றார் என்­றும் கண்­டு­ பி­டித்­தி­ருக்­கி­றார்­கள். அதே­போல ஸ்வப்னா நான்கு மலை­யா­ளப் படங்­க­ளைத் தயா­ரிக்க கடத்­தல் பணத்­தைக் கட­னாக அளித்த தக­வ­லும் வெளி­யா­கி­யுள்­ளது.