புதுடெல்லி: மத்திய அரசை கிண்டல் செய்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், "கொரோனா காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி-நமஸ்தே டிரம்ப், மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்-மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே-அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன்-பீகார் மெய்நிகர் பேரணி, ஜூலை-ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி. இந்தச் சாதனைகளினால் கொரோனா கிருமிக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவு பெற்றது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

