பிரதமர் அலுவலக பொறுப்பில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி

பிரதமர் அலுவலக பொறுப்பில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி

1 mins read
96ef8b99-3ed9-482d-91be-105a87a32920
பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா. படம்: ஊடகம் -

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா (படம்), பிரதமர் அலுவலக இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1994ல் ஐஏஎஸ் பயிற்சி முடித்த அமுதா தற்போது உத்தரகாண் டிலுள்ள லால்பகதுார் சாஸ்திரி ஐஏஎஸ் அகாடமியில் விரி வுரையாளராக உள்ளார்.

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற அமுதா, தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றியுள்ளார். மறைந்த முன்னாள் அதிபர் அப்துல் கலாம், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி நல்ல பெயர் எடுத்தவர் அமுதா.