புதிய உச்சம்; இந்தியாவில் ஒரே நாளில் 49,310 பேருக்கு கொவிட்-19

புதிய உச்சம்; இந்தியாவில் ஒரே நாளில் 49,310 பேருக்கு கொவிட்-19

1 mins read
fb6454df-32b8-46c4-9552-35926a725f7d
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 49,310 பேருக்கு கொவிட்-9 உறுதி செய்யப்பட்டுள்ளது.   படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 49,310 பேருக்கு கொவிட்-9 உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மொத்த கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் 30,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 740 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்