தமிழகம்: இருநூறாயிரத்தை நெருங்கும் கிருமி பாதிப்பு

2 mins read
ec9b913d-c012-479c-9729-ffb05e1b2f10
சென்னையில் கொவிட்-19 கிருமித்தொற்று பரிசோதனை மையத்துக்கு வந்துள்ள பெண்ணின் சளி மாதிரியை பரிேசாதனைக்கு சேகரிக்கிறார் சுகாதார ஊழியர். படம்: ஏஎஃப்பி -

சென்னை: ஒவ்­வொரு நாளும் 'தமி­ழ­கத்­தில் இது­வரை இல்­லாத அள­வுக்கு' என்று குறிப்­பிட்டு கூறும் அள­வுக்கு கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் பாதிக்­கப்­ப­டு­பவர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

இத­னால், அச்­சத்­து­டன் பொழு தைக் கழிக்­கும் சூழ்­நி­லைக்கு மக்­கள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

தமி­ழ­கம் முழு­வ­தும் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் ஒட்டு மொத்த எண்­ணிக்கை இரண்டு லட்­சத்தை எட்ட உள்­ளது. பலி எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஒரே நாளில் மேலும் 6,785 பேரிடம் இந்த தொற்று பரவி, புதிய உச்­சம் தொட்­டது. இவர்­க­ளை­யும் சேர்த்து, தமி­ழ­கத்­தில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 199,749 ஆக உயர்ந்­துள்­ளது.

அத்­து­டன், ெவள்­ளியன்று ஒரேநாளில் கொரோ­னாவால் 88 பேர் உயி­ரி­ழந்­ததை அடுத்து, தமி­ழ­கத்­தில் பலி எண்­ணிக்கை 3,320 ஆக உயர்ந்­துள்­ளது.

இது­கு­றித்து தமி­ழக சுகா­தா­ரத் துறை வெள்ளிக்கிழமை இரவு வெளி­யிட்ட அறிக்­கை­யில், "தமி­ழ­கத்­தில் புதி­தாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்­ளது. இவர்களில் 6,729 பேர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். 56 பேர் வெளி­மா­நி­லங்­கள், வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள் என கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது.

"தொற்றால் பாதிக்­கப்­பட்ட 6,785 பேரில் 1,299 பேர் சென்­னையைச் சேர்ந்தவர்­கள். இவர்களையும் சேர்த்து சென்­னை­யில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 92,206 ஆக உயர்ந்­துள்­ளது.

"மாநிலத்­தில் ஒட்டுமொத்­தமாக 199,749 பேர் கொவிட்-19 தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"தமி­ழ­கம் எங்கும் 114 ஆய்­வ­கங்­கள் உள்­ளன.

"இந்த ஆய்வகங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 65,150 மாதி­ரி­களைப் பரி­சோ­தனை செய்­துள்ளனர். இது­வரை 22,23,019 மாதி­ரி­கள் சோதனை செய்­யப்­பட்­டுள்­ளன.

"இதுவரை கிருமிப் பரவலால் 121,389 ஆண்களும் 78,337 பெண்­களும் 23 மூன்­றாம் பாலி­னத்­த­வர்­க­ளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமி­ழ­கத்­தில் இத்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்­பியவர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 143,297ஆக உள்­ளது," என்று தெரி­வித்துள்­ளது.