போலி முகவரி: ஆந்திரா, தெலுங்கானாவில் புதுசிக்கல்

1 mins read
730cd60f-3a72-456d-b267-87bbd4dcddf9
செகந்தராபாத்தில் உள்ள காய்கறிச்சந்தை. படம்: ஏஎப்பி -

அமராவதி: ஆந்­தி­ரா­வில் கொவிட்-19 நோயைக் கண்­ட­றிய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­ப­வர்­கள் போலி முக­வ­ரி­யைக் கொடுத்து ஏமாற்­று­வது தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னால் நோய் இருப்­பது உறு­தி­யா­கும்­பட்­சத்­தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­வ­ரு­கிறது என அம்­மா­நில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

அந்­தி­ரா­வில் தற்­போது கிரு­மித் தொற்­றால் தின­மும் ஏழாயி­ரம் பேர் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். அண்­மைய சில தினங்­க­ளாக தின­மும் 60 பேர் வரை உயி­ரி­ழக்­கி­றார்­கள்.

இதை­ய­டுத்து பலர் தாமாக முன்­வந்து கொரோனா பரி­சோ­தனை செய்துகொள்­கின்­ற­னர்.

அவ்­வாறு முன்­வ­ரு­ப­வர்­கள் மருத்­து­வ­ம­னை­களில் போலி முக­வ­ரி­யை­யும் தொலை­பேசி எண்­க­ளை­யும் கொடுப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னால் நோய்த்­தொற்று இருப்­பது உறு­தி­யான பிற­கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது சிர­ம­மாய் உள்­ளது.

திருப்­ப­தி­யில் மட்­டும் இவ்­வாறு போலி முக­வரி தந்­துள்ள 236 பேரை போலி­சா­ரும் நக­ராட்சி அதி­கா­ரி­களும் தேடி­வ­ரு­கின்­ற­னர்.

ஆந்­தி­ரா­வில் உள்ள விசா­கப்­பட்­டி­னம், குண்­டூர், விஜ­ய­வாடா, நெல்­லூர் உள்­ளிட்ட பல்­வேறு நக­ரங்­களில் இப்­பி­ரச்­சினை இருப்­ப­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்கிறது. அண்டை மாநி­ல­மான தெலுங்­கா­னா­வும் இதே பிரச்­சி­னையை எதிர்­கொண்­டுள்­ளது.

அங்கு போலி முக­வரி கொடுத்து பரி­சோ­தனை செய்து­கொண்ட ஈராயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் தேடப்­பட்டு வருவதாக தெலுங்கானா ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு மாநிலங்களுக்கும் இப்பிரச்சினை புது தலைவலியாக மாறியுள்ளது.