கொரோனா: மக்கள் விழிப்புடன் செயல்பட மோடி அழைப்பு

கொரோனா: மக்கள் விழிப்புடன் செயல்பட மோடி அழைப்பு

2 mins read
39fa2de8-ad00-47aa-9f6c-aa08d117953f
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் ஜூலை 29ஆம் தேதி வரை கட்டுப்பாட்டு உத்தரவுகள் நடப்பில் உள்ள நிலையில், சிலிகுரி பகுதியில் சாலையோரக் கடைகளை அகற்ற போலிசார் கடும் நடவடிக்கை எடுத்தனர். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: மற்ற நாடு­க­ளை­விட இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் ஏற்­படும் உயி­ரி­ழப்பு குறை­வாக உள்ள போதி­லும், பல பகு­தி­களில் கொரோனா வேக­மாக பர­வு­வ­தால் மக்­கள் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என இந்­தி­யப் பிர­த­மர் மோடி தனது மாதாந்­திர வானொலி உரை­யில் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

ஒவ்­வொரு மாதத்­தி­லும் கடைசி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று, வானொ­லி­யில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் மோடி பேசி வரு­கி­றார். அந்த வகை­யில் இந்த மாதத்­தின் கடைசி ஞாயிற்­றுக்

கிழ­மை­யான நேற்று தனது 67வது வானொலி உரை நிகழ்ச்­சி­யில் பேசி­னார்.

அந்த உரை­யில், "கொரோ­னா­தொற்­றி­லி­ருந்து குண­ம­டை­வோர் விகி­தம் வேறு சில நாடு­க­ளைக் காட்­டி­லும் நம் நாட்­டில் அதி­க­மா­கவே உள்­ளது.

"அது­போல் நம் நாட்­டில் கொரோ­னா­ தொற்றால் உயி­ரி­ழப்­போ­ரின் எண்­ணிக்­கை­யும் பெரும்­பா­லான நாடு­க­ளை­வி­டக் குறை­வு­தான்.

"ஒரே­ ஒரு உயி­ரி­ழப்­பு­கூட வருத்­த­மா­ன­து­தான் என்­றா­லும் கொரோ­னா­வில் லட்­சக்­க­ணக்­கான மக்­க­ளின் உயிர்­களை மத்­திய அரசு காப்­பாற்­றி­யுள்­ளது. இருப்­பி­னும் கொரோனா தொற்­றின் அச்­சு­றுத்­தல் இன்­னும் முடி­வுக்கு வர­வில்லை.

"நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் கிரு­மித்­தொற்று வேக­மா­கப் பரவி வரு­வ­தால், மக்­கள் இன்­னும் கூடு­தல் விழிப்­பு­டன் செயல்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­யம்.

"வெளியே செல்­லும்­போது முகக்­க­வ­சம் அணி­தல், சமூக வில­க­லைப் பின்­பற்றிச் செயல்­

ப­டுவதைத் தொடர்ந்து கடைப்

­பி­டிக்க வேண்­டும்.

"முகக்­க­வ­சம் அணி­வ­தால்

மூச்­சு­வி­டு­த­லில் சிர­மம் இருப்­ப­தா­க­வும் அசௌ­க­ரி­ய­மாக இருப்­ப­தா­க­வும் சிலர் நினைக்­க­லாம். அத­னால் வெளியே செல்­லும்­போது முகக்­க­வ­சத்தை அடிக்­கடி கழற்ற வேண்­டும் என்று தோன்­றக்­கூ­டும்.

"ஆனால், அவ்­வாறு முகக்­க­வ­சத்­தைக் கழற்­றும் முன், கொரோனா போர் வீரர்­க­ளான மருத்­து­வப் பணி­யா­ளர்­கள், சுகா­தா­ரப் பணி­யா­ளர்

களைச் சற்று நினைத்­துப் பாருங்­கள். அவர்­க­ளின் அர்ப்­ப­ணிப்­பான பணி­யை­யும் நினைத்து பார்த்­த­பின் முகக்­க­வ­சத்­தைக் கழற்­று­வ­தைப் பற்றி யோசி­யுங்­கள்.

"பீகார், ஜார்க்­கண்ட் மாநி­லங்­கள், வட­கி­ழக்கு மாநி­லங்­கள் இந்­தக் கொரோனா காலத்­தில் உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட பொருட்­களை மக்­க­ளி­டம் விளம்­ப­ரப்­ப­டுத்தி, அதன் உற்­பத்­தியை அதி­கப்­ப­டுத்­து­வது பாராட்­டுக்­கு­ரி­யது.

"நம் தேசத்தை கொரோனா இல்­லாத நாடாக மாற்­று­வோம், தற்­சார்பு பொரு­ளா­தார நாடாக மாற்­று­வோம் என சுதந்­திர தின­மான ஆகஸ்ட் 15ஆம் தேதி­யன்று மக்­கள் உறு­தி­மொழி ஏற்க வேண்­டும்," என்று மோடி பேசி­னார்.