செல்ஃபி மோகம்: ஆற்றில் சிக்கிய மாணவிகளை மீட்ட போலிசார்

செல்ஃபி மோகம்: ஆற்றில் சிக்கிய மாணவிகளை மீட்ட போலிசார்

1 mins read
864d7e7e-b3c5-45b0-905f-b80ade89f00d
-

போபால்: ஆற்றுக்கு நடுவே நின்று செல்ஃபி எடுத்த மாணவிகளை மத்தியப் பிரதேச போலிசார் கடும் போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.

சிந்த்வாரா மாவட்டத்தின் ஜுனார்தியோ பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அப்பகுதியில் உள்ள பென்ச் நதிக் கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில் மேகா ஜாரே, வந்தனா திரிபாதி என்ற 2 மாணவிகள் மட்டும் செல்ஃபி எடுக்கும் மோகத்தில் நீரோட்டமுள்ள ஆற்றின் நடுவே சென்றுள்ளனர். அங்குள்ள பாறை மீது நின்று அவர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர்.

அப்போது திடீரென வெள்ளப் பெருக்கு அதிகரித்தது. இதனால் மாணவிகள் இருவரும் பாறை மீது நின்றபடி செய்வதறியாது தவித்தனர். உடனே கரையிலிருந்த மாண

விகள் பதறியடித்து போலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த 10க்கும் மேற்பட்ட போலிசார் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு அம்மாணவிகளை மீட்டனர்.