'ஆன்டிஜென்' பரிசோதனையில் பெருமளவு தவறான முடிவுகள்

1 mins read
6fb9fd74-0121-4e50-866e-b0dad5dfc94a
மும்பையில் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று மக்களின் உடல்வெப்பநிலையைச் சரிபார்க்கும் மும்பை நலத்துறை ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: கொவிட்-19 தொற்­றைக் கண்­ட­றியப் பயன்­ப­டுத்­தப்­படும் 'ஆன்­டி­ஜென்' சோத­னை­களில் தொற்று இல்லை என்று அறி­யப்­பட்ட நோயா­ளி­களில் அதிக விழுக்­காட்­டி­ன­ருக்கு ஆர்டி-பிசி­ஆர் சோத­னை­யில் தொற்று இருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மும்­பை­யில் உள்ள இரண்டு பெரிய ஆய்­வ­கங்­க­ளின் தர­வு­கள், ஆன்­டி­ஜென் சோத­னை­களில் கொரோனா தொற்று இல்லை என்று அறி­யப்­பட்ட 65 விழுக்­காட்டு நோயா­ளி­க­ளுக்­குப் பின்­னர் ஆர்டி-பிசி­ஆர் சோத­னை­யில் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தைத் தெரி­விக்­கின்­றன.

விரை­வாக முடி­வு­க­ளைக் காட்­டும் ஆன்­டி­ஜென் பரி­சோ­த­னை­யில் இது­போன்ற தவ­றான முடி­வு­கள் இருப்­ப­தற்­கான அபா­யத்தை இந்த வேறு­பாடு அடிக்­கோ­டிட்டு காட்­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

113 மருத்­து­வ­ம­னை­களில் ஒவ்­வொரு நாளும் கிட்­டத்­தட்ட 50,000 பேரைப் பரி­சோ­திக்­கும் தமி­ழ­கம், ஆர்டி-பிசி­ஆ­ரைத் தொற்­றைக் கண்­ட­றிய உத­வும் ஒரே கரு­வி­யாக நம்­பு­வ­தற்கு இந்த வேறு­பாடே கார­ண­மா­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.