விவசாயிக்கு உதவிய பாலிவுட் நடிகர்; இரு பெண்களின் கல்விச் செலவை ஏற்க முன்வந்த முன்னாள் முதல்வர்

விவசாயிக்கு உதவிய பாலிவுட் நடிகர்; இரு பெண்களின் கல்விச் செலவை ஏற்க முன்வந்த முன்னாள் முதல்வர்

2 mins read
9d5f157d-59f4-4b8c-b87b-2efe1e40ab5a
சமூக ஊடகங்களில் பரவிய படமும் பாலிவுட் நடிகர் சோனு சூட் கோப்புப் படமும். -
multi-img1 of 2

திரு­மலை: ஆந்­திர மாநி­லம், சித்­தூர் மாவட்­டம், மத­னப்­பள்ளி மண்­ட­லம் கே.வி.பள்­ளிக்­குட்­பட்ட மகல்­ரா­ஜு­வரி பள்ளி என்­னும் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் விவ­சாயி வி நாகேஷ்­வர ராவ், கொரோனா ஊர­டங்­கால் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்டு டிராக்­ட­ருக்கு வாடகை செலுத்த முடி­யா­மல் தனது இரு மகள்­களை வைத்து ஏர் உழு­தார். இது தொடர்­பான காணொ­ளிக் காட்­சி­கள் சமூக ஊட­கங்­களில் பர­ப­ரப்­பாக வெளி­யா­யின.

இதனை அறிந்த பாலி­வுட் நடி­கர் சோனு சூட் தமது டிவிட்­ட­ரில், வய­லில் உழவு செய்­வ­தற்கு உத­வி­யாக அந்த விவ­சாயி நாகேஷ்­வர ராவுக்கு இரு உழ­வு­மா­டு­களை தான­மாக அளிப்­ப­தா­க­வும் தந்­தைக்கு உதவி செய்த பெண்­களை படிப்­பில் கவ­னம் செலுத்­து­மா­றும் கூறி­யி­ருந்­தார்.

ஆனால், உழ­வு­மா­டு­க­ளுக்­குப் பதி­லாக நடி­கர் சோனு சூட் புதி­தாக டிராக்­டர் வாங்­கித் தந்­துள்­ளார். ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை விவ­சா­யி­யி­டம் அந்த டிராக்­டர் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. மேலும், நாக­ராஜை தொலை­பேசி வழி­யா­கத் தொடர்பு கொண்டு சோனு சூட் பேசி­னார்.

இந்­நி­லை­யில், விவ­சா­யிக்கு புதிய டிராக்­டர் அனுப்­பி­வைத்து உத­விய நடி­கர் சோனு சூட்­டுக்கு ஆந்­திர முன்­னாள் முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு நன்றி தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பாக சந்­தி­ர­பாபு நாயுடு தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "இரண்டு மகள்­க­ளின் கல்­விக்­குப் பொறுப்­பேற்று, அவர்

­க­ளின் கனவு நன­வாக உதவி செய்­வேன்," எனப் பதி­விட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, அந்­தக் குடும்­பம் உழவு மாடு­கள் அல்­லது டிராக்­டர் வாங்க சிர­மப்­ப­ட­வில்லை என்­றும் பழைய நினை­வு­களை பொழு­து­போக்­காக செய்­து­காட்­டி­ய­தா­க­வும் தாம் விசா­ரித்த வகை­யில் இது தெரிய வந்­த­தா­க­வும் கேவி பள்ளி மண்­டல வளர்ச்சி அதி­காரி எஸ். மனோ­கர் ராஜு தெரி­வித்துள்­ளார். இந்நிலையில், இப்பிரச்­சினை அர­சி­யல் ஆக்­கப்பட்டு வரு­வ­தாக சிலர் சமூக ஊட­கங்­களில் கூறி­னர்.