இந்தி திரைக்கலைஞர்களுக்கு எச்சரிக்கை

இந்தி திரைக்கலைஞர்களுக்கு எச்சரிக்கை

1 mins read
5e77accd-c4cb-4114-866b-566df7d24c53
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள பாகிஸ்தான் கலைஞர்களுடன் இணைந்து சில இந்தி நடிக, நடிகையர் நிகழ்ச்சி படைத்ததாக குறைகூறும் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் ‌ஷெவாலே. கோப்புப்படம் -

புதுடெல்லி: இந்தித் திரையுலகில் பாகிஸ்தான் உளவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 20 உளவாளிகள் இந்தித் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுடன் இருப்பதாகவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உளவாளிகளிடம் நெருக்கம் பாராட்ட வேண்டாம் என சம்பந்தப்பட்ட பிரபலங்களிடம் இந்திய புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்த போதிலும், சம்பந்தப்பட்ட திரைப் பிரபலங்கள் உளவாளிகளுடனான நெருக்கத்தை கைவிடவில்லை என அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

"இந்தித் திரையுலக நட்சத்திரங்கள் சிலர் அமெரிக்காவிலும் கனடாவிலும் சில தனிநபர்கள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர்.

"இந்திய புலனாய்வுப் பிரிவினர் வட அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 15க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் உளவாளிகள் குறித்து இந்திய திரை நட்சத்திரங்களிடம் விவரம் தெரிவித்துள்ளனர்.

"எனினும் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் தங்கள் தொடர்புகளைக் கைவிடவில்லை என புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன," என்று இந்திய ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.