மத்திய அரசின் அண்மைய நடவடிக்கையின் மூலம் 47 போலி சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அரசின் தொழில்நுட்பக் கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
எனினும் அதேபோன்ற போலி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து இத்தகைய போலி சீன செயலிகளை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு.
முதற்கட்டமாக 47 போலி சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான விதிகளை ஏற்கெனவே கடுமையாக்கியுள்ள நேரத்தில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இது தவிர, மேலும் 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

