இந்தியாவில் கொவிட்-19 கிருமி அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1.5 மில்லியனைத் தாண்டிவிட்டது. அன்று ஒரு நாளில் மட்டும் 49,292 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் 781 பேர் உயிரிழந்தனர். 12 நாட்களில் 500,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. கிருமிப் பரவல் தொடங்கியபோது 148 நாட்களுக்குப் பின்னரே முதல் 500,000 நோயாளிகள் பதிவாயினர். கிருமிப் பரவல் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் அளவில் மருத்துவர்களும் தாதியர்களும் இல்லை என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
உதாரணமாக பெங்களூரு நகரில் ஜூன் 30ஆம் தேதி 3,916 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை ஜூலை 27ஆம் தேதி சுமார் எட்டு மடங்கு அதிகரித்து 33,816 ஆனது.
ஆனால் இத்தனை பேருக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அங்கு பற்றாக்குறை நிலவுகிறது.

