மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குடிசைப்பகுதியில் வாழும் 57% மக்களிடமும் இந்தப் பகுதியில் வசிக்காத 16% மக்களிடமும் இயற்கையாகவே கொரோனா கிருமியை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதாக ஆய்வின் வழி கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் 60% மக்களுக்கு கொரோனா தொற்று பரவினால், நிச்சயம் பெரும்பாலானவர்கள் உடலில் எதிர்ப்புச் சக்தி உருவாகி விடும் என வல்லுநர்கள் கருத்துகள் தெரிவித்து வந்தனர். இப்போது இந்த ஆய்வுகள் மூலம் வல்லுநர்கள் கூறிய கருத்துகள் உண்மையாகி உள்ள தாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
மும்பை முழுவதும் 7,000க்கும் மேலானோருக்கு ரத்தப் பரிசோ தனை நடத்தப்பட்டது.
இதன்மூலம், இயற்கையாகவே சேரியில் வாழும் 57% மக்களுக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உடலில் இருப்பது கண்டறியப்பட்டது.
அதேவேளையில், சேரியில் வசிக்காத 16% மக்களுக்கு மட்டுமே எதிர்ப்புச் சக்தி காணப்பட்டதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மும்பை மாவட்டத்தில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் 'ரேபிட்' கருவிகளைக் கொண்டு பரிசோதனைகளை நடத்தினர்.
மும்பை மாநகராட்சி பணி யாளர்கள், நிதி ஆயோக், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்ட மெண்டல் ரீசர்ச் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் பரிசோத னைகளை நடத்தின.
நெருக்கமான அமைப்பைக் கொண்டுள்ளதால் குடிசைப்பகுதி களில் வாழும் மக்களிடையே கொரோனா கிருமித்தொற்று எளிதாக அதிகம் பரவியிருக்கும் என்ற அச்சத்துடனே இந்த பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், பரிசோதனை முடிவுகள் சுகாதாரப் பணியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

