பாட்னா: ஒருபக்கம் கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீளாத சூழலில் மற்ெறாரு பக்கம் மழையும் வெள்ளமும் அசாம், பீகார் மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ள சூழலில் அசாம், பீகார் மாநிலங்களில் பல நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அசாமில் கனமழையும் வெள்ளமும் சற்றே தணியத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த வெள்ள பாதிப்பு பீகாரில் மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும் பல ஆறுகளிலும் அபாய அளவை எட்டும் வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக வும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பீகாரின் பல பகுதிகளிலும் பெய்துவரும் கனமழையால், கண்டக், பாக்மடி, கோசி ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கிழக்கு சாம்ப்ரான், தர்பங்கா, சஹர்சா கோபால்கஞ்ச் உள்ளிட்ட 12 மாவட்டங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர்.
பீகார் மாநில பேரிடர் நிர்வாக கூடுதல் செயலாளர் ராமச்சந்துரு கூறுகையில், "12 மாவட்டங்களில் 86 வட்டாரங்களில் உள்ள 625 பஞ்சாயத்துகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்துள்ள 1.8 லட்சம் மக்களுக்கு 463 சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது,'' என்று தெரிவித்தார்.
இதற்கிைடயே, அசாம் மாநிலத் தில் இதுவரை 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா கிருமி பாதிப்பை விடவும் பெரிய பாதிப்பு களை ஏற்படுத்தியுள்ளது கனமழை. இதனால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அசாமின் நதிக்கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன.
வெள்ளம், மழையினால் அசாமில் 108 பேர் உயிரிழந்திருப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

