ஹர்ஷவர்தன்: தினமும் 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

ஹர்ஷவர்தன்: தினமும் 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

1 mins read
539ac554-d793-432e-90a4-7637722cc008
மும்பையில் நடத்தப்படும் பரிசோதனை. படம்: ஊடகம் -

புதுடெல்லி: கொவிட்-19 நோய் பாதிப்பை கண்டறிய இந்தியாவில் தற்போது நாள்தோறும் சுமார் ஐந்து லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்த எண்ணிக்கையானது அடுத்த ஓரிரு மாதங்களில் பத்து லட்சமாக அதிகரிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி நாட்டில் முதல் கொவிட்-19 நோயாளி அடையாளம் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதையடுத்து கடந்த ஆறு மாதங்களாக கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டம் நீடித்து வருவதாகத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஜூலை 21ஆம் தேதி வரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1.81 கோடி. நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் 4.46 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.