ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவை ஆகஸ்ட் 14ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சமயம் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதை அடுத்து பரபரப்பு நிலவி வருகிறது.
எம்எல்ஏக்கள் சிலர் சச்சினுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

