ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயா பெயர்கள்

ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயா பெயர்கள்

1 mins read
ffba17c8-7d8b-43d1-abef-86cd91df4adb
-

சென்னையில் உள்ள மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சூட்டி தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் "அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம்" எனவும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம்" எனவும் கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் "ஜெயலலிதா மெட்ரோ நிலையம்" எனவும் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. சென்னையில் கடந்த 2015 முதல் இந்த மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.