பிளாஸ்மா தானம் செய்வோருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை அறிவித்த ஆந்திர முதல்வர்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்துவந்தாலும், இவ்வாண்டு இறுதிவாக்கில்தான் தடுப்பு மருந்து கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அனைவருக்கும் கிடைப்பது சாத்தியமா என்பதும் கேவிக்குறியாகவே உள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மா பயன்பாடு, கொவிட்-19 சிகிச்சையில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தாலும் கிருமித்தொற்றிலிருந்து மீண்ட பலரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வருவதில்லை.

ஒரு சிலரது பிளாஸ்மாக்களில் மட்டுமே நோயெதிர்ப்புத் திறன் இருப்பதாகவும் அவற்றை மட்டுமே சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், பிளாஸ்மா தானம் செய்வோருக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக தினமும் 10,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அங்கு இதுவரை 1,40,933 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 63,864 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்; 1,349 பேர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!