பாரந்தூக்கி கவிழ்ந்து 11 பேர் பலி

ஹைத­ரா­பாத்: ஆந்­திர மாநி­லம் விசா­கப்­பட்­டி­னம் கப்­பல் பட்­ட­றை­யில் பாரந்­தூக்கி கவிழ்ந்து 11 பேர் உயி­ரி­ழந்­த­னர். இச்­சம்­ப­வம் நேற்­றுக் காலை ஹிந்­துஸ்­தான் கப்­பல் பட்­ட­றை­யில் நிகழ்ந்­தது. எடை தாங்­கா­மல் 75 மெட்­ரிக் டன் எடை­யுள்ள அந்த கன­ரக பாரந்­தூக்கி கவிழ்ந்­த­தாக தொழிற்­சங்­கத் தலை­வர் ஒரு­வர் கூறி­னார்.

காயங்­க­ளு­டன் மீட்­கப்­பட்ட பலர் அரு­கி­லுள்ள மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். மீட்­புப் படை­யி­னர் விரைந்து வந்து நேற்று மாலை வரை மூன்று சட­லங்­களை மீட்­ட­னர். இடி­பா­டு­களில் சிக்கி உயி­ருக்­குப் போரா­டிக்­கொண்­டி­ருந்த சில­ரை­யும் அவர்­கள் மீட்­ட­னர்.

கிட்­டத்­தட்ட பத்­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் வாங்­கப்­பட்ட பாரந்­தூக்­கி­யில் எடை சரி­பார்ப்பு நடந்­து­கொண்­டி­ருந்த வேளை­யில் திடீ­ரென அது கவிழ்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது. அங்­கி­ருந்த ஊழி­யர்­கள் மீது அந்த 60 அடி உயர பாரந்­தூக்கி விழுந்­த­தில் பல­ரும் அந்த இடத்­தி­லேயே நசுங்கி மாண்­ட­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்து உள்­ளது.