ஹைதராபாத்: கொரோனா கிருமிப் பரவல் காரணமாக அனைத்துலக விமானப் பயணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்புவோருக்காக 'வந்தே பாரத்' என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின்கீழ் சவூதி அரேபியாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஹைதராபாத் விமான நிலையம் வந்திறங்கிய அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 11 பயணிகள் தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அன்று இரவு 7.30 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 28 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3.11 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.1.66 கோடி என அதிகாரிகள் கூறினர்.
சிறப்பு விமான பயணிகளிடம் ரூ.1.66 கோடி கடத்தல் தங்கம்
1 mins read
ஹைதராபாத் அனைத்துலக விமான நிலையம். படம்: ஏஎப்பி -

