கள்ளச்சாராயம்: மரண எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

கள்ளச்சாராயம் குடித்த பலர் சுருண்டு விழுந்து மடிந்தனர் சண்­டி­கர்: பஞ்­சாப் மாநி­லத்­தில் கள்­ளச்­சா­ரா­யம் குடித்து சிகிச்சை யில் இருந்தோரில் 23 பேர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து மரண எண்­ணிக்கை 64 ஆக அதிகரித்து விட்டது.

கொரோனா கிரு­மித்­தொற்று பர­வல் கார­ண­மாக மது­பா­னக் கடை­கள் மூடப்­பட்­டுள்­ளன. மது பிரி­யர்­கள் போதைக்­காக வெவ்­வேறு வகை­யான பொருட்­களை நாடி வரு­கின்­ற­னர். கிருமி நாசினி திர­வத்­தைக் குடித்து 9 பேர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் ஆந்­தி­ரா­வில் நிகழ்ந்­தது. அத­னைத் தொடர்ந்து பல்­வேறு இடங்­களில் கள்­ளச்­சா­ராய வியா­பா­ரம் சூடு­பி­டித்துள்­ளது.

பஞ்­சாப் மாநி­லம் அமிர்­த­ச­ரஸ், பட்­டாலா, டார்ன் டாரன் மாவட்­டங்­களில் பல்­வேறு இடங்­களில் கடந்த புதன்­கி­ழமை (ஜூலை 29) கள்­ளச்­சா­ராய விற்­பனை நடந்­தது. அந்த சாரா­யத்தை வாங்­கிக் குடித்த மட்­சல், டாங்­கரா கிரா­மங்­க­ளைச் சேர்ந்த பலர் மயங்கி விழுந்­த­னர். மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்ட அவர்­கள் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­த­னர். சாரா­யத்­தில் நஞ்சு கலந்­தி­ருந்­தது மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் தெரிய வந்­தது. மறு­நா­ளும் அடுத்­த­டுத்து பலர் இறந்­த­னர். வெற்றிக்கிழமை 19 பேரும் நேற்று 23 பேரும் மாண்ட நிலையில் மரண எண்ணிக்கை 64க்கு உயர்ந்தது.

இச்­சம்­ப­வம் குறித்து நீதி விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தாக முத­ல­மைச்­சர் அம்­ரேந்­தர் சிங் கூறி­னார். சாரா­யம் காய்ச்சி விற்­பனை செய்­யும் நபர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

சம்­ப­வம் தொடர்­பாக நேற்று இரவு வரை பத்து பேர் கைது செய்­யப்­பட்­டுள்ளனர். அவர்­களில் பல்­விந்­தர் கோர் என்­னும் பெண்­ணும் அடங்­கு­வார். கள்­ளச்­சா­ரா­யத்தை அவ­ரது கண­வ­ரும் குடித்து உயி­ரிழந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மேலும் பாதிக்­கப்­பட்ட மூன்று மாவட்­டங்­க­ளி­லும் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் ஐந்து தனிப்­படை போலி­சார் தீவிர தேடு­தல் வேட்­டை­யில் ஈடு­பட்­ட­னர். கிட்­டத்­தட்ட 40 இடங்­களில் நடத்­தப்­பட்ட திடீர் சோத­னை­யில் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய ஏழு கள்­ளச்­சா­ராய வியா­பா­ரி­கள் சிக்­கி­னர்.பல இடங்­களில் சாரா­யம் காய்ச்சி வைக்­கப்­பட்­டி­ருந்த ஊறல்­களை போலி­சார் கைப்­பற்றி அழித்­ த­னர்.