ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி ஏன் என விளக்கம்

புது­டெல்லி: புதிய கல்­விக் கொள்­கைக்கு பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யில் ஜூலை 29ஆம் தேதி டெல்­லி­யில் கூடிய மத்­திய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­தது. அதைத் தொடர்ந்து கல்­விக் கொள்கை குறித்து நாடு முழு­வ­தும் பல விமர்­ச­னங்­கள் எழுந்து வரு­கின்­றன. இதற்­கி­டையே புதிய கல்­விக்­கொள்கை வரை­வுக் குழு தலை­வ­ரும் இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி அமைப்­பின் முன்­னாள் தலை­வ­ரு­மான கே.கஸ்­தூ­ரி­ரங்­கன் செய்தி நிறு­வ­னம் ஒன்­றுக்கு சிறப்பு பேட்டி அளித்­தார்.

அப்­போது அவர் கூறு­கை­யில், “ஐந்­தாம் வகுப்பு வரை தாய்­மொ­ழி­யில் கல்­வியை கற்­பிக்க வேண்­டும் என கொண்டு வந்­தி­ருக்­கி­றோம். இந்­தி­யா­வில் ஆங்­கி­லம் பேசும் மக்­கள்­தொகை 15 அல்­லது 16 விழுக்­கா­டு­தான். அது பெரிய எண்­ணிக்கை அல்ல.

“குழந்­தை­கள் பிறந்­தது முதல் வெளி­யு­ல­கத் தொடர்பை தாய்­மொ­ழி­யில்­தான் மேற்­கொள்­கின்­றன. இதன் கார­ண­மாக, உள்­தொ­டர்­புக்கு தாய்­மொ­ழி­யில் பதி­ல­ளிக்­கும் மூளை­யின் செயல்­தி­றன், வேறு எதை­யும்­விட மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும்.

“ஒரு குழந்தை மற்­றொரு வெளி­நாட்டு மொழி­யின்­மூ­லம் செயல்­ப­டு­வ­தை­விட அதன் தாய்­மொ­ழி­யின் மூலம் புதிய யோச­னை­கள், புதிய அறி­வி­யல் மற்­றும் கணி­தத்தை கற்றுக்கொள்­வது என்­பது மிக­வும் இயல்­பா­னது. என­வே­தான் ஐந்­தாம் வகுப்பு வரை தாய்­மொழி கல்­விக்கு பரிந்­துரை செய்­தி­ருக்­கி­றோம். இது நீங்­கள் ஆங்­கி­லம் கற்­பதை தடை செய்­யாது. அதை கவ­னித்­துக்­கொள்­ள­வும் ஏற்­பாடுள்­ளது,” என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!