இந்தியா வருவோருக்கான புதிய பாதுகாப்பு நெறிமுறைகள்

14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்; பொய்யான தகவல் அளிப்பது குற்றம்

புது­டெல்லி: வெளி­நா­டு­களில் இருந்து இந்­தியா வரு­வோர் தங்­க­ளைக் கண்­டிப்­பாக 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

அனைத்­து விமானப் பய­ணி­களும் கண்­டிப்­பாக ‘ஆரோக்­கிய சேது’ செய­லியை கைபே­சி­யில் பதி­வி­றக்­கம் செய்து விவ­ரங்­க­ளைக் குறிப்­பிட வேண்­டும் என­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

‘வந்தே பாரத் மிஷன்’ திட்­டத்­தின் கீழ் பல்­வேறு நாடு­களில் சிக்­கித் தவிக்­கும் இந்­தி­யர்­கள் தாய­கம் அழைத்து வரப்­ப­டு­கின்­ற­னர். இது­வரை பல லட்­சம் பேர் இவ்­வாறு நாடு திரும்­பி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வெளி­நா­டு­களில் இருந்து தாய­கம் திரும்­பு­வோர் கடைப்­பி­டிக்க வேண்­டிய புதிய பாதுகாப்பு நெறி­மு­றை­களை மத்திய சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்­ளது.

வரும் 8ஆம் தேதி முதல் இந்­தப் புதிய விதி­மு­றை­கள் நடை­மு­றைக்கு வரும் என­வும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி இந்­தியா திரும்­பும் அனை­வ­ரும் தாங்­கள் தற்­போ­துள்ள நாட்­டில் இருந்து புறப்­படும் முன் 72 மணி நேரத்­துக்கு முன்­பாக, சுய­வி­வ­ரக் குறிப்பு விண்­ணப்­பத்தை (newdelhiairport.in) என்ற இணைய தளத்­தில் பதி­விட வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

“அனைத்து பய­ணி­களும் 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வது கட்­டா­ய­மா­கும். இதில் 7 நாட்­கள் பணம் செலுத்­தித் தனிமைப் படுத்­திக்கொள்­ளும் வசதி உண்டு. அந்த ஏழு நாட்­களில் நடத்­தப்­படும் பரி­சோ­த­னை­யில் கிரு­மித்­தொற்று இல்­லா­விட்­டால், வீடு திரும்பி அங்கு ஏழு நாட்­கள் தனி­மைப் படுத்திக்கொள்ள வேண்­டும்.

“கர்ப்­பி­ணிப் பெண்­கள், பத்து வய­துக்­குட்­பட்ட குழந்­தை­கள், குடும்­பத்­தில் ஏதே­னும் இறப்பு நேர்­த­லால் வரு­வோர், முதி­யோர், தீவிர உடல்­ந­லப் பிரச்­சினை போன்ற தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளுக்­காக வரு­வோர் மட்­டுமே வீட்­டுக்­குச் சென்று 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள அனு­மதிக்­கப்­ப­டு­வார்­கள்,” என சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பய­ணி­கள் இந்­தியா வந்­த­பின் பணம் செலுத்தி தங்கும் விடு­தி­யில் தங்கி தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­வ­தில் இருந்து விதி­வி­லக்கு கோர­மு­டி­யும் என்று குறிப்­பிட்­டுள்ள சுகா­தார அமைச்சு, பய­ணம் செய்­வதற்கு 96 மணி­நே­ரத்­துக்கு முன்பே பிசி­ஆர் பரி­சோ­தனை செய்து கொண்­ட­தற்­கான ஆதா­ரத்தை பயணி அளிக்க வேண்­டும் என கூறி­யுள்­ளது.

மேலும், பரி­சோ­த­னை­யின் முடிவு கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறுதி செய்ய வேண்­டும் என்­றும், பயணி அளிக்­கும் அறிக்கை பொய்­யா­ன­தாக இருந்­தால், அது கிரி­மி­னல் குற்­ற­மா­கக் கரு­தப்­படும் என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

விமா­னம் அல்­லது கப்­ப­லில் புறப்­படும் முன் பய­ணி­க­ளுக்கு பரி­சோ­தனை நடத்­தப்­ப­டும்­போது தொற்று அறி­கு­றி­கள் இல்­லா­தோர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!