இந்தியாவில் 52,050 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

இந்தியாவில் 52,050 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

1 mins read
a57a9a22-d948-4e86-8ab7-1892be8fde5b
புதுடெல்லியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த வழிபாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பும் பக்தர்கள். அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. படம்: இபிஏ - ராஜாத் குப்தா -

இந்தியாவில் திங்கள் காலை வரையிலான 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோா் எண் ணிக்கை 1,855,745 ஆகியுள்ளது. இதுவரை 1,230,510 போ் குண மடைந்துள்ளனா். 38,938 போ் உயிரிழந்துள்ளனா். 586,298 போ் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தியாவில் தொடா்ந்து 6வது நாளாக 50,000க்கும் மேற்பட்டோ ருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.