சுடச் சுடச் செய்திகள்

தங்கம் இறக்குமதி குறைந்தது

இந்தியாவில் கொரோனா பொது முடக்கம் காரணமாக சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி 24% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 39.66 டன் தங்கத்தை இறக்குமதி செய்த உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா இருந்தது. நடப்பாண்டில் இது 30 டன் ஆக குறைந்துள்ளது. மார்ச் முதல் அங்கு நடப்பிலுள்ள பொதுமுடக்கத்தால் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஓராண்டுக்கு முன்பு யுஎஸ் $17.1 கோடியாக இருந்த ஜூலை மாதத்தின் தங்க இறக்குமதி தற்போது யுஎஸ் $17.8 கோடி வரை உயர்ந்துள்ளது. தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை ஜூலை 31-க்குப் பிறகு ரூ.41ஆயிரத்தையும் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டதோடு தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon