பிரதமருடன் திடீரென பேசிய மு.க.ஸ்டாலின்

பிரதமருடன் திடீரென பேசிய மு.க.ஸ்டாலின்

1 mins read
2cefcf28-b2f7-4b11-844a-25fc8503d1b7
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். படம்: ஊடகம் -

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திடீரென பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

உயர் நீதிமன்றம் அளித்த ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பினை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி பிரதமர் மோடியிடம் தான் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதுகலை மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து இருந்தன.

இந்நிலையில், "இட ஒதுக் கீடு குறித்து அண்மையில் கடிதம் எழுதியிருந்த நான், இதன் அடுத்தகட்டமாக பிரத மர் மோடியுடன் தொலைபேசி யில் பேசினேன். மாநில இட ஒதுக்கீடு சட்டங்களை அரசு ஆதரிக்கவேண்டும் என நான் அவரிடம் வலியுறுத்தினேன்.

அதற்கு, "பாதுகாப்பற்ற வர்களை நாம் தொடர்ந்து பாதுகாப்போம்," என்று பிர தமர் கூறியதாக டுவிட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.