திருச்சி: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இருப்பினும், திங்கள்கிழமை ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காய்ச்சல் முகாம்களை நடத்தி கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களைக் கண்டறிந்து வருவதாகக் கூறிய ராதாகிருஷ்ணன், திருச்சியில் கொரோனா மருத்துவமனைகளில் 1,302 படுக்கை வசதிகள் உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், தமிழக சுகா தாரத்துறை வெளியிட்டுள்ள அறிக் கையில், "மாநிலத்தில் திங்கள் கிழமை ஒரேநாளில் புதிதாக 5,609 பேருக்கு தொற்று உறுதியானது.
"மொத்த பாதிப்பு 263,222 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 109 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 202,283 பேர் குணமடைந்துள்ளனர்," என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசு கையில், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகளின் கூட்டு முயற்சி காரணமாக பாதிப்பு குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்து வருகிறது என்பதே சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். இந்தியாவிலேயே அதிகளவில் 7½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது சென்னையில்தான். அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டதால்தான் இங்கு நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்துள்ளது," என்றனர்.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் நேரில் கேட்டறிந்தார். படம்: தமிழக ஊடகம்

