செம்மொழி நிறுவனத்தை மூடுவதற்கு மத்திய அரசு மறைமுக திட்டம் - ராமதாஸ்

செம்மொழி நிறுவனத்தை மூடுவதற்கு மத்திய அரசு மறைமுக திட்டம் - ராமதாஸ்

1 mins read
08f850d5-225d-4e0e-ad0e-cffc2e696bf0
செம்­மொழி தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னத்தை பல்­க­லைக்­கழகத்­து­டன் இணைக்கும் மத்திய அரசின் திட்டம், செம்மொழி நிறுவனத்தை மூடுவதற்கு மறைமுகமாக வழிவகுக்கும் என பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். படம்: ஊடகம் -

சென்னை: செம்­மொழி தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னத்தை பல்­க­லைக்­கழகத்­து­டன் இணைக்கக் கூடாது என பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இது­தொ­டர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், சென்­னை­யில் செயல்­பட்டு வரும் செம்­மொழி தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னம் ஏதே­னும் ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைக்­கப்­படும் என்று புதிய கல்விக் கொள்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பது அதிர்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

செம்­மொழி நிறு­வ­னத்தை மறை­மு­க­மாக மூடு­வ­தற்­கான இந்த திட்­டம் கண்­டிக்­கத்­தக்­கது என்­றும் இதற்­காக மத்­திய அரசு கூறி­யுள்ள கார­ணம் மிக­வும் விநோ­த­மா­னது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"மத்­திய அர­சுத் தரப்­பில் கூறப்­படும் இந்­தக் கார­ணம் நம்­பும்­ப­டி­யாக இல்லை; இதை ஏற்கமுடி­யாது," என்று ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.