மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை; தாயும் குழந்தையும் பலி

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­யில் இன்­றும் கன­மழை தொடர்ந்து பெய்­யும் என வானிலை மையம் எச்­ச­ரித்­துள்­ளது. இத­னால், ‘சிவப்பு எச்­ச­ரிக்கை’ விடுக்­கப்­பட்டு, மீட்­புப் படை­யி­னர் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஏற்­கெ­னவே மும்­பை­யில் கொட்­டித் தீர்த்த கன­ம­ழை­யால் நகர் எங்­கும் வெள்­ளக்­கா­டாக மாறி யது. ரயில், பேருந்து போக்குவரத்­து­களும் முடங்­கின. தாதர், ஹிந்த்­மடா, பெண்டி பஜார் உட்­பட பல்­வேறு நக­ரங்­களில் தாழ்­வான இடங்­களில் மழைநீர் தேங்­கி­ய­தால் வெள்­ளக்காடாக காட்­சி­ய­ளித்­தன.

இந்­நி­லை­யில், மும்பை, வகோ­லா­வில் கொட்­டித் தீர்த்த கன­மழை­யின் கார­ண­மாக, தோபி­காட் பகு­தி­யில் சாக்­கடை கால்­வாய் ஓரம் கட்­டப்­பட்டு இருந்த மாடி வீடு ஒன்று நேற்று முன்­தி­னம் காலை இடிந்து விழுந்­தது.

இதை­ய­டுத்து, அந்த வீட்­டில் வசித்து வந்த 28 வயது தாயும் அவ­ரது 2 வயது முதல் 6 வயது வரை­யி­லான மூன்று குழந்­தை­களும் கால்­வாய் நீரில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­னர். அவர்­க­ளைத் தேடும் பணி­யில் தீய­ணைப்பு வீரர்­களும் தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யி­ன­ரும் ஈடு­பட்­ட­னர். இரண்டு வயது பெண் குழந்­தை­யும் தாயும் பிண­மாக மீட்­கப்­பட்­ட­னர். 5 வயது குழந்­தையை இன்­னும் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. ஆறு வயது மூத்த பெண் குழந்தை மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!