மற்றொரு அமைச்சர், திரிபுரா முதல்வருக்கு கிருமி பாதிப்பு

திரிபுரா: ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை அடுத்து, மற்றொரு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதானுக்கும் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால், சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிைடயே, கொரோனா அறிகுறி இருப்பதால் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள தாக திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon