'அபத்தமான வரைபடத்தை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான்'

'அபத்தமான வரைபடத்தை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான்'

1 mins read
15514ae6-e240-4e4c-88a8-9118a536728d
புதிய வரை­ப­டத்­துக்கு தனது அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்து இருப்­ப­தா­க­வும் இது பாகிஸ்­தான் மக்­க­ளின் லட்­சி­யத்தை பிர­தி­ப­லிப்­ப­தா­க­வும் பாகிஸ்­தான் பிர­த­மர் இம்­ரான் கான் கூறி­யுள்­ளார்.படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: ஒட்­டு­மொத்த காஷ்­மீர், குஜ­ராத், பஞ்­சாப்­பின் சில பகுதி களை­யும் தங்­கள் நாட்­டு­டன் இணைத்து பாகிஸ்­தான் வெளி யிட்­டுள்ள புதிய வரை­ப­டத்­துக்கு இந்­தியா கடும் கண்­ட­னம் தெரி வித்­துள்­ளது.

புதிய வரை­ப­டத்­துக்கு தனது அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்து இருப்­ப­தா­க­வும் இது பாகிஸ்­தான் மக்­க­ளின் லட்­சி­யத்தை பிர­தி­ப­லிப்­ப­தா­க­வும் பாகிஸ்­தான் பிர­த­மர் இம்­ரான் கான் கூறி­யுள்­ளார்.

இந்நிலையில், வெளி­யு­றவு அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள செய்திக் குறிப்பில் பாகிஸ்தானை சாடியுள்ளது.

"பாகிஸ்­தா­னின் அர­சி­யல் வரை ­ப­டம் என்ற பெய­ரில் அபத்தமான வரை­ப­டம் வெளி­யா­னதைப் பார்த்­தோம். இந்­தி­யா­வின் எல்­லைப்­ப­கு­தி­களைப் பாகிஸ்­தான் சொந்­தம் கொண்­டா­டு­வதை ஒருபோதும் ஏற்கமுடி­யாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ, நம்பகத்தன்மை யுடனோ இல்லை," என்று குறிப்பிட்டு உள்ளது.