தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எனக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக வந்த செய்தி உண்மையில்லை - ரஞ்சன் கோகாய்

1 mins read
0f08471d-2d9f-4158-8d25-c68839c7e0da
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் இப்போதைய பாஜக நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் கோகாய். படம்: ஊடகம். -

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உத்தரவு வழங்கியவர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இவர் இப்போது பாஜக நியமன எம்பியாகவும் உள்ளார்.

நீதிபதி பொறுப்பில் இருந்து தான் ஓய்வுபெறுவதற்கு முன்னர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் தொடர்பான வழக்கை விசாரித்து வரலாற்றுத் தீர்ப்பை வழங்கவேண்டும் என ஆர்வம் காட்டியவர், அதன்படியே ராமர் கோயில் கட்டவும் உத்தரவிட்டார்.

ராமர் கோயில் கட்ட நேற்று அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், கோகாய்க்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. கோகாய்க்கு ஆதரவாக, "கடவுள் இருக்கிறார், அவர் கைவிட மாட்டார்," என வலைத் தளவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் திரு ரஞ்சன் கோகாய், எனக்குக் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தச் செய்தி உண்மையல்ல. நான் நலமுடன் இருக்கிறேன் என்று பூம்லைஃப் இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி நாளேடான பத்திரிகா உள்ளிட்ட நாளிதழ்கள் கோகாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தன.