சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், அயோத்தியில் மகாகவி கம்பருக்கு முழு உருவச் சிலை அமைப்பதே ராமருக்குச் செய்யும் சிறந்த தொண்டாக இருக்கும் என்று தெரிவித்து பிரதமருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார், "வால்மீகி முனிவர், தனது ராமாயணத்தில் மிகச் சிறந்த மன்னர் என்ற அளவில் ராமரைப் பாராட்டி இருக்கிறார். ஆனால் மகாகவி கம்பர், தான் இயற்றிய ராமாயணத்தில் ராமரை மிகச் சிறந்த லட்சிய மனிதராகப் போற்றி இருக்கிறார்.
"எனவே, அயோத்தியில் மகாகவி கம்பருக்கு முழு உருவச் சிலை அமைப்பதே ராமருக்குச் செய்யும் சிறந்த தொண்டாக இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

