2 மில்லியனை நெருங்கும் நோயாளிகள் எண்ணிக்கை

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை இந்­தி­யா­வில் இரண்டு மில்­லி­யனை நெருங்­கி­உள்­ளது.

மத்­திய சுகா­தார அமைச்­சின் அறிக்­கை­யின்­படி புதன்­கி­ழமை ஒரே நாளில் புதி­தாக சுமார் 56 ஆயி­ரம் பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதன்­வழி பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 1,964,536 பேராக அதி­க­ரித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் 595,501 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். சுமார் 1.32 மில்­லி­யன் பேர் முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­னர்.

இது­வரை சுமார் 40 ஆயி­ரம் பேரை காவு வாங்கி உள்­ளது கொவிட்-19 நோய். இந்­நி­லை­யில் நாடு முழு­வ­தும் சுமார் 22 மில்­லி­யன் மாதி­ரி­கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.

குண­ம­டை­யும் விகி­தம் 67.19 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது. மறு­பக்­கம் இறப்பு விகி­தம் 2.09 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் இரண்­டா­வது முறை­யாக நேற்று முன்­தி­னம் 6.19 லட்­சம் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன. இந்த எண்­ணிக்கை விரை­வில் அதி­க­ரிக்­கப்­பட உள்­ளது.

அனைத்து மாநி­லங்­க­ளை­யும் சேர்த்து 1,366 பரி­சோ­த­னைக்­கூடங்­கள் இயங்கி வரு­கின்­றன.

கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்த­வர்­களில் 68 விழுக்­காட்­டி­னர் ஆண்­கள் என்­றும் 32 விழுக்­காட்­டி­னர் பெண்­கள் என்­றும் மத்­திய சுகா­தார அமைச்­ச­கத்­தின் செய­லர் ராஜேஷ் பூஷண் தெரி­வித்­துள்­ளார்.

இறந்­த­வர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் 60 அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­தி­னர் என்­றும் 45 முதல் 60 வய­துக்­குட்­பட்­ட­வர்­கள் 37 விழுக்­காட்­டி­னர் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!