அகமதாபாத்: கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எட்டு பேர் பலியான சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்தில் இயங்கி வரும் அம்மருத்துவமனையில் நேற்று அதிகாலை மூன்று மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த 40 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எனினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

