கேரள நிலச்சரிவில் குறைந்தது ஐவர் பலி

கேரள நிலச்சரிவில் குறைந்தது ஐவர் பலி

1 mins read
6e2bc0f7-8074-4f79-858c-268a53435637
-

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெய்த பருவமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. ராஜமாலா பகுதியில் நடந்த இந்த நிலச்சரிவில் சிக்கியோரில் 5 பேர் மாண்டனர். அத்துடன் சுமார் என்பது பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. குறைந்தது பத்து பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மீட்பு பணியை துரிதப்படுத்தும்படி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளை கொண்ட பகுதியாகும். இதுவரை 3 குடும்பங்கள் அதில் சிக்கி கொண்டுள்ளன இடுக்கி போலிஸ் சூப்பிரெண்டு கூறினார்.

வயநாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிச்சியார்மலா பகுதியில் மழை மற்றும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 2 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இந்நிலையில், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என கேரள போலிசார் தெரிவித்து உள்ளனர்.