அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்துள்ள இந்நேரத்தில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கான கோயிலைக் கட்ட முடிவு செய்திருந்த அவரது தீவிர ஆதரவாளர்கள் அந்த கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கிய அதேநாளில் இக்கோயில் பணிகளை தொடங்கி வைத்தது எனது அதிர்ஷ்டம் என்று மாநில சட்டமன்ற உறுப்பினரும் இந்தக் கோயில் திட்டத்திற்கான தலைவருமான எல்எல்ஏ தலாரி வெங்கட் ராவ் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. "இவர் கேட்காமலேயே மக்களுக்கு வரங்களை அள்ளித்தரும் தெய்வம்," என்று திரு ராவ் புகழ்ந்தார்.
கொரோனா நோய்ப்பரவலால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோதும் திரு ஜெகன்மோன் ரெட்டி மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக பாடுபட்டு வருவதால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்திருப்பதாக கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

