டெல்லியில் பன்னிரண்டு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
செவ்வாய்க்கிழமையன்று பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் அந்தப் பெண் தனது வீட்டிலேயே கிருஷ்ணா என்ற நபரால் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 33 வயது கிருஷ்ணா, அந்தப் பெண்ணின் தலையைக் கூர்மையான பொருளால் பலமுறை குத்தியது போலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் கொள்ளையடிப்பதற்காக அந்தச் சிறுமி வசித்த வீட்டிற்குச் சென்றதாக புதுடெல்லியின் இணை ஆணையாளர் ஷாலினி சிங் தெரிவித்தார்.
ஏஐஐம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்தச் சிறுமியின் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

