தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக செல்வந்தர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

1 mins read
5ba35c98-9a24-46b3-b0a4-c91423683edf
-

உலக செல்வந்தர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 80.6 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு சுமார் 22 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பிரான்ஸை சேர்ந்த பெர்னார்ட் ஆர்னல்டைப் பின்னுக்குத் தள்ளி, முகேஷ் அம்பானி நான்காவது இடத்தை பிடித்துள்ளார். பெர்னார்ட் ஆர்னல்டின் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்ததால், அவரது சொத்து மதிப்பு 80.2 பில்லியன் டாலராக சரிந்தது.

முகேஷ் அம்பானி, இதற்கு முன்னதாக, இலோன் மஸ்க், செர்ஜி பிரின், லாரி பேஜ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார்.