கேரள நிலச்சரிவு: 24 உடல்கள் மீட்பு; பலரைக் காணவில்லை

மூணாறு: கேர­ளா­வில் மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்­ச­ரி­வில் 24 பேர் பலி­யா­கி­விட்­டார்­கள். மேலும் சுமார் 50 பேரைக் காண­வில்லை என்­ப­தால் மீட்­புப் பணி­கள் தொடர்­வ­தாக அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

என்­றா­லும் அங்கு பரு­வ­நிலை கார­ண­மாக நேற்று பணி­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­ட­தா­க­வும் மேலும் இரண்டு நாட்­க­ளுக்கு கடும் மழை தொட­ரும் என்­ப­தால் மண்­ணில் புதைந்­துள்­ள­வர்­களை மீட்­பது சவா­லாக இருக்­கும் என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கேர­ளா­வில் இடுக்கி, கோழிக்­கோடு, கண்­ணூர், காசர்­கோடு, வய­நாடு உள்­ளிட்ட பல மாவட்­டங்­களில் தொடர்ந்து பேய்­மழை பெய்து வரு­வ­தால் பல இடங்­க­ளி­லும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு உயிர்ப்­பலி அதி­க­ரித்து வரு­கிறது.

தமி­ழக எல்­லையை ஒட்டி அமைந்­துள்ள இடுக்கி மாவட்­டத்­தில் வெள்­ளிக்­கி­ழமை திடீ­ரென பயங்­க­ர­மான நிலச்­ச­ரிவு ஏற்­பட்­ட­தால் அந்­தப் பகு­தி­யில் வசித்து வந்­த­வர்­கள் குடும்­பத்­தோடு மண்­ணில் புதைந்­த­னர்.

மூணாறு மற்­றும் அதைச் சுற்­றி­லும் உள்ள தேயிலை தோட்­டங்­களில் தமி­ழர்­கள் அதி­கம் வேலை செய்து வரு­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு அரு­கி­லேயே குடி­யி­ருப்­புப் பகு­தி­யும் இருக்­கிறது.

பெட்­டி­முடி என்ற பகு­தி­யில் இருந்த ஒரு குடி­யி­ருப்பு நிலச்­ச­ரி­வில் சிக்­கி­யது. 20க்கும் மேற்­பட்ட வீடு­கள் புதைந்­தன.

அதி­காலை நேரம் என்­ப­தால் அந்த வீடு­களில் இருந்த சுமார் 78 பேரில் மூவர் மட்­டுமே தப்­பிச் சென்று இதர பகு­தி­களில் உள்­ள­வர்­க­ளுக்­குத் தக­வல் தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

செய்தி காட்­டுத்தீ போல் பர­வி­யதை அடுத்து கேரள முதல்­வ­ரின் உத்­த­ர­வுக்கு ஏற்ப, தேசிய பேரி­டர் மீட்­புக் குழு­வி­னர், தீய­ணைப்­புப் படை­யி­னர், போலிஸ் உள்­ளிட்ட பல­ரும் மும்­முர மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி மொத்­தம் 24 உடல்­கள் மீட்­கப்­பட்­டன. அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் தென் தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்று நம்­பப்­ப­டு­கிறது. மர­ண­ம­டைந்­தோ­ரில் பல­ரும் தென்­காசி மாவட்­டம் புளி­யங்­குடி, சங்­க­ரன்­கோ­வில், விரு­து­ந­கர் மாவட்­டம் ராஜ­பா­ளை­யம் ஆகிய பகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என தெரி­ய­வந்­தது.

16 பேர் நிலச்­ச­ரி­வில் இருந்து மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

மற்­ற­வர்­க­ளின் கதி என்ன என்­பது தெரி­யா­த­தால் மீட்­புப் பணி­கள் தொடர்­கின்­றன.

நிலச்­ச­ரிவு நிகழ்ந்த பெட்­டி­முடி பகு­தி­யில் எத்­தனை பேர் வசித்து வந்­தார்­கள் என்­பது துல்­லி­ய­மா­கத் தெரி­ய­வில்லை என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போது பெட்­டி­முடி பகு­திக்கு உற­வி­னர்­கள் பலர் வந்­தி­ருந்­த­தா­க­வும் சிலர் கூறு­கி­றார்­கள்.

மூணாறு பஞ்­சா­யத்து யூனி­ய­னின் முன்­னாள் தலை­வர் ஆனந்த சிவன் என்­ப­வ­ரின் குடும்­பம் மண்­ணில் புதைந்­து­விட்­ட­தாக அஞ்­சப்­ப­டு­கிறது.

மின்­சா­ரம் இல்­லா­த­தும் தரைப்­பா­லங்­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­தும் பெரும் சிர­மத்தை ஏற்­ப­டுத்தி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. பலி­யா­ன­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­குப் பிர­த­மர் மோடி உட்­பட பல­ரும் இரங்­கல் தெரி­வித்து வரு­கி­றார்­கள். அரசு உத­வித் தொகை­யும் அறி­வித்­துள்­ளது.

தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் மண்ணில் புதைந்தனர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!