கொவிட்-19 மரணம் கூடுகிறது; ஒரே நாளில் 933 பேர் பலி

1 mins read
75c00732-e2df-4510-9b84-803e62eaf3a2
இந்தியாவில் ஒரே நாளில் 933 பேர் பலியானதை அடுத்து மரண எண்­ணிக்கை 42,518 ஆகக் கூடி­யது. கோல்கத்தாவில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் கிருமி நாசினி அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஊழியர் ஒருவர். படம்: இபிஏ -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மிப் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரு­கிறது. நேற்­றுக்­ காலை 8 மணி நில­வ­ரப்­படி மொத்­தம் 2.08 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்டு இருந்­த­னர். 1.427 மில்­லி­யன் பேர் குண­ம­டைந்­த­னர்.

ஒரே நாளில் 933 பேர் பலியானதை அடுத்து மரண எண்­ணிக்கை 42,518 ஆகக் கூடி­யது.

இத­னி­டையே இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­க­ரும் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பி­யோ­வும் வெள்­ளிக்­கிழமை தொலை­பே­சி­யில் பேசி­னர்.

இந்­திய-பசி­பிக் பகு­தி­யில் கொவிட்-19 கிரு­மி­யைக் கட்­டுப்­படுத்­து­வ­தில் இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பு குறித்து இரு­வ­ரும் பேசி­னர்.

இவ்­வே­ளை­யில், எல்லை கடந்து செல்­லும் மளிகை, காய்­கறி வியா பாரி­க­ளைப் பரி­சோ­தித்து கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும்­படி மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய அர­சாங்­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது.