இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

1 mins read
0f113b5a-2fce-4573-85ea-5491b3428c35
தமது படைபலத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்திய ராணுவத்தின் போர் விமானங்களையும் லடாக் வான் பகுதியில் வலம் வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஏராளமான வீரர்களையும் எல்லைப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: இபிஏ -

புது­டெல்லி: லடாக் எல்­லை­யில் கல்­வான் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­யில் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்­திய மற்­றும் சீன ராணுவ வீரர்­கள் இடையே நடந்த கடும் மோத­லில் இந்­திய வீரர்­கள் 20 பேர் மர­ணம் அடைந்­த­னர். சீனா தரப்­பில் 35 வீரர்­கள் உயி­ரி­ழந்­த­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

இதன் தொடர்பில் பல முறை இரு தரப்பு பேச்சு நடந்துள்ளது.

இந்நிலையில், லடாக்­கில் எல்லை­க­ளைப் பிரிக்­கும் உண்மை கட்­டுப்­பாட்டுக் கோடு பகு­தி­யில் இருந்து சீனப் படை­களை மீட்­பது பற்றி தவு­லத் பெக் ஓல்டி பகு­தி­யில் இந்­தியா மற்­றும் சீனா இடையே மேஜர் ஜென­ரல் அள­வி­லான பேச்சு வார்த்தை விரை­வில் நடக்­கும் என ராணுவ வட்­டா­ரங்­கள் தெரி­வித்தன.