சுடச் சுடச் செய்திகள்

ஆந்திரா: ஹோட்டல் வளாகத்தில் தீ; எழுவர் பலி

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா நகரில் கொவிட்-19 நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த ஹோட்டல் தீ பிடித்ததை அடுத்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். தீச்சம்பவம் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஹோட்டலுக்குள் சிக்கிக் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளூர் போலிசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

கடந்த வாரம் அகமதாபாத் நகரிலுள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இதுபோன்ற தீச்சம்பவம் நடந்தது. அதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon